லண்டனில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது!
லண்டனில் திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட 140 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் இந்த கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆபரேஷன் பேஸ்லைஃப் (Operation Baselife) திட்டத்தின் ஒரு பகுதியாக தலைநகரில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
லெய்செஸ்டர் சதுக்கத்தை (Leicester Square) சுற்றியுள்ள பகுதிகளில் பெண்களிடம் இருந்து தொலைபேசிகள் திருடப்பட்டதாக தகவல் வெளியானதை தொடர்ந்து காவல்துறையினர் சமானியர்கள் போல் ரோந்து சென்றுள்ளனர்.
இதன்போது குற்றவாளிகள் மடக்கி பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 1 times, 2 visits today)




