காணாமல் போன சுற்றுலாப் பயணி! வெளியான அதிர்ச்சி தகவல்
பொத்தபிட்டியவில் காணாமல் போன டேனிஷ் சுற்றுலாப் பயணியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது
மலையேற்றத்தின் போது காணாமல் போன டேனிஷ் சுற்றுலாப் பயணியின் (32) சடலம் பொத்தபிட்டிய அலகல்ல மலையடிவாரத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மலையேற்றத்தின் போது காணாமல் போனதாகக் கூறப்படும் பெண் ஒருவரின் சடலம் கண்டி அலகல்ல மலைத்தொடரில் இருந்து இலங்கை இராணுவ சிங்கப் படைப்பிரிவின் (11வது பிரிவு) படையினரால் மீட்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.
பெண் சுற்றுலாப் பயணியின் மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறிப்படாத நிலையில் இது தொடர்பில் போலீசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.






