பிரித்தானியாவில் தெருக்களில் படுத்துறங்கும் இலட்சக்கணக்கான மக்கள்!
பிரித்தானியாவில் ஏறக்குறைய 03 இலட்சம் மக்கள் வீடற்ற நிலையில் தெருக்களில் வசித்து வருவதாக தி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் 299,100 குடும்பங்கள் கடுமையான வீடற்ற நிலையை எதிர்கொண்டதாக புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
இந்நிலை 2012 ஆம் ஆண்டு முதல் 45 சதவீதமாக காணப்பட்ட நிலையில், 2021 ஆம் ஆண்டில் 21 சதவீத அதிகரிப்புடன் காணப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நெருக்கடி நிலையானது பிரித்தானியாவில் தனியார் வாடகை வீடுகளின் அதிகரிப்பு, குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மற்றும் சமூக வாடகை குடியிருப்புகள் குறைந்து வருவதை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், 2041 ஆம் ஆண்டுக்குள் 360,000 பேர் வீடற்ற நிலைக்கு தள்ளப்படுவார்கள் எனவும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.





