அமெரிக்காவின் கலிபோர்னியாவில் விபத்துக்குள்ளான மருத்துவ ஹெலிகாப்டர்

கலிபோர்னியாவின் சாக்ரமெண்டோவில் உள்ள நெடுஞ்சாலையில் மருத்துவ ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் மூன்று பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக மீட்பு குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் ஒரு விமானி, செவிலியர் மற்றும் துணை மருத்துவ அதிகாரி என்று மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
விபத்து காரணமாக நெடுஞ்சாலை 50ன் கிழக்கு நோக்கிய பாதைகள் மூடப்பட்டுள்ளதாக கலிபோர்னியா நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு தெரிவித்துள்ளது.
ரீஷ் ஏர் (REACH AIR) நிறுவனம் “தமது எண்ணங்களும் வழிபாடுகளும் பாதிக்கப்பட்டவர்களை சுற்றியே உள்ளது” என்று தமது அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
(Visited 6 times, 1 visits today)