இலங்கை செய்தி

கொழும்பில் மிகப்பெரிய குழாய் சேதம் – பல பகுதிகளுக்கு நீர் விநியோகிக் முடியாத நிலை

கொழும்பு ஹைலெவல் வீதியின் கொடகம பகுதியில் நீர் விநியோகம் செய்யும் பெரிய குழாய் சேதமடைந்துள்ளது.

இன்றுஅதிகாலை லபுகம நீர்த்தேக்கத்தில் நீரை விநியோகம் செய்யும் பெரிய குழாயில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி மோதியதில் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

நீர் குழாயில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதால் பாரியளவு நீர் வௌியேறி வருகின்றது.

இது குறித்த இடத்தில் உள்ள மின்கம்பமும் உடைந்து வீதியில் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் சிக்கிய கார் சாரதி உட்பட இருவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இருவரும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கார் அதிவேகமாக வந்து வீதியை விட்டு விலகி தண்ணீர் குழாயில் மோதி கவிழ்ந்துள்ளது.

இந்த நீர் குழாயில் ஏற்பட்ட பாரிய சேதம் காரணமாக கொடகமை, ஹோமாகம, பன்னிபிட்டிய, பெலன்வத்தை, ருக்மல்கம, மத்தேகொடை உள்ளிட்ட பகுதிகளுக்கான நீர் விநியோகம் சிறிது நேரம் தாமதமாகலாம் என நீர் வழங்கல் சபையின் மஹரகம வலய அலுவலகம் தெரிவித்துள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!