லண்டனில் கத்தி குத்து தாக்குதல்: சிறுமி ஒருவர் படுகாயம்
லண்டனின் லெய்செஸ்டர் சதுக்கத்தில் கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்ட ஒருவரை கைது செய்ததாக பிரிட்டிஷ் போலீசார் தெரிவித்தனர்,
சம்பவத்தில் 11 வயது சிறுமி காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார். மற்றும் 34 வயது பெண் ஒருவர் சிறிய காயங்களுக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த தாக்குதல் பயங்கரவாதம் தொடர்பானதாக கருதப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த மாத தொடக்கத்தில் கலவரங்களுக்குப் பிறகு பிரிட்டனின் பொலிஸ் படைகள் அதிக எச்சரிக்கையில் உள்ளன,
பாதிக்கப்பட்ட 11 வயது சிறுமி காயங்கள் உயிருக்கு ஆபத்தானது அல்ல என்று போலீசார் தெரிவித்தனர்,





