உலகம் செய்தி

மாலைத்தீவு ஜனாதிபதிக்கு பில்லிசூனியம் – இரு அமைச்சர்கள் கைது

மாலைத்தீவு ஜனாதிபதிக்கு பில்லிசூனியம் வைக்க முயன்றதாகத் தெரிவித்து இரு அமைச்சர்களை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாலைத்தீவு ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த முகமது முய்சு கடந்த ஆண்டு மாலைத்தீவில் ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.

பதவியேற்றதிலிருந்து இந்தியப் படைகளை வெளியேற்றியது உட்படப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி முய்சு, சீன ஆதரவாளராகப் பார்க்கப்படுகிறார்.

இந்நிலையில் ஜனாதிபதி முய்சுவிற்கு எதிராக ப்ளக் மெஜிக் (Black Magic) மூலம் பில்லிசூனியம் வைக்க முயன்றதாகத் தெரிவித்து அவரது கட்சியைச் சேர்ந்த 2 அமைச்சர்கள் அந்நாட்டுக் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுச்சூழல் துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் ஷாம்னாஸ் சலீம் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தில் அமைச்சராகப் பணியாற்றிவரும் அவரது கணவர் ஆதம் ரமீஸ் ஆகிய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

இந்த இருவரும் அமைச்சர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரையும் 7 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

(Visited 26 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!