செய்தி

மகாராஷ்டிரா தேர்தல் – வாக்குச் சாவடியில் உயிரிழந்த சுயேச்சை வேட்பாளர்

மகாராஷ்டிராவின் பீட் தொகுதியைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் வாக்குச் சாவடியில் மாரடைப்பால் உயிரிழந்தார்

மகாராஷ்டிராவில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் வாக்களிக்க காத்திருந்தபோது பீட் பகுதியைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

உடனடியாக அந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளில் புதிய ஆட்சியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. நவம்பர் 23ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளது.

பீட் பகுதியில் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கியவர் பாலாசாகேப் ஷிண்டே. இவர் தனது வாக்கினை செலுத்த பீடில் உள்ள சத்ரபதி ஷாஹு வித்யாலயா வாக்குப்பதிவு மையத்தில் காத்திருந்தார். அப்போது திடீரென அவர் தரையில் விழுந்தார்.

பின்னர் சத்ரபதி ஷம்பாஜி நகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் அங்கு இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. MATRIZE வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில், மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 145 தேவைப்படும் நிலையில், பாஜக கூட்டணிக்கு 150 முதல் 170 தொகுதிகள் வரை வெற்றி கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கூட்டணிக்கு 110 முதல் 130 தொகுதிகள் வரை வெற்றி கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

(Visited 5 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி