அரசியல் இலங்கை செய்தி

கலீதா ஜியாவின் இறுதிச்சடங்கு இன்று: டாக்கா பறந்தார் விஜித ஹேரத்!

பங்களாதேசின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் Khaleda Zia இறுதிச்சடங்கு இன்று (31) நடைபெறுகின்றது.

தெற்காசிய நாடுகளில் இருந்து முக்கிய அரசியல் பிரமுகர்கள் இறுதிச்சடங்கில் பங்கேற்று, அஞ்சலி செலுத்தவுள்ளனர். இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijith Herath பங்கேற்கின்றார்.

இதற்காக இன்று காலை அவர் பங்களாதேஸ் தலைநகர் டாக்கா நோக்கி பயணமானார்.

பங்களாதேஸின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா தனது 80 ஆவது வயதில் நேற்று காலமானார். ஆவரின் மறைவையொட்டி பங்களாதேஸின் மூன்று நாட்கள் துக்கம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பங்களாதேஸின் ஜல்பைகுரியில் கடந்த 1945-ம் ஆண்டில் கலீதா பிறந்தார்.

1960-ம் ஆண்டில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜியாவூர் ரஹ்மானை, கலிதா திருமணம் செய்தார்.

1975 -ம் ஆண்டில் மூத்த ராணுவ தளபதி ஜியாவூர் ரஹ்மான் ஆட்சியைக் கைப்பற்றி ஜனாதிபதியாக பதவியேற்றார்.

கடந்த 1978-ம் ஆண்டில் அவர் பங்களாதேஸ் தேசிய கட்சியை தொடங்கினார்.

1981-ம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்பட்டார். இதன்பிறகு அவரது மனைவி கலீதா ஜியா கட்சி தலைவராக பொறுப்பேற்றார்.

1991-ல் நடைபெற்ற தேர்தலில் பிஎன்பி அமோக வெற்றி பெற்று கலீதா ஜியா பங்களாதேசின் முதல் பெண் பிரதமராக பதவியேற்றார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!