ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியை ஆப்பிரிக்காவில் கொண்டு வர உதவிய ஜோர்டான் கைது!
தென்னாப்பிரிக்க கால்பந்து தலைவர் டேனி ஜோர்டான் மோசடி மற்றும் திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜோர்டான் தனது தனிப்பட்ட நலனுக்காக ஒரு PR நிறுவனம் மற்றும் ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை வாடகைக்கு எடுக்க தென்னாப்பிரிக்க கால்பந்து சங்கத்தின் (SAFA) நிதியில் சுமார் R1.3 மில்லியன் ($72,372) பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2010 இல் தென்னாப்பிரிக்காவில் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றை நடத்துவதற்கான உரிமையைப் பெற்ற நாட்டின் உலகக் கோப்பை ஏலக் குழுவை வழிநடத்திய முக்கிய தலைவராக இவர் பார்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





