Site icon Tamil News

1500 வீரர்களை எல்லைக்கு அனுப்பும் ஜோ பைடன்!

மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைய முயற்சிப்பவர்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன்படி மெக்சிகோ எல்லைக்கு அமெரிக்க இராணுவ வீரர்கள், 1500 பேரை அனுப்ப அதிபர் ஜோ பைடன் தீர்மானித்துள்ளார்.

ஜோபைடனின் ஆட்சிக்  காலத்தில் சட்ட விரோதமாக எல்லையில் நுழைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாக குற்றச்சாட்டு உள்ளது.

இதற்கிடையே அவர் அதிபர் தேர்தலில் 2-வது முறையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில் மெக்சிகோ எல்லைக்கு கூடுதல் படையை அனுப்ப ஜோபைடன் முடிவு செய்து உள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டதன் பின் தினமும் 10 ஆயிரம் பேர் மெக்சிகோ எல்லை வழியாக உள்நுழைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version