IPL Match 43 – 154 ஓட்டங்கள் குவித்த சென்னை சூப்பர் கிங்ஸ்

18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 43வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலாவதாக பேட்டிங் செய்தது.
ஷமி வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே தொடக்க ஆட்டக்காரர் ஷேக் ரஷீத் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இதையடுத்து மற்றொரு தொடக்க வீரர் ஆயுஷ் மாத்ரேவுடன் சாம் கர்ரன் ஜோடி சேர்ந்தார்.
அரைசதத்தை நோக்கி முன்னேறிய டெவால்டு பிரெவிஸ், 25 பந்துகளில்(1 பவுண்டரி, 4 சிக்ஸர்கள்) 42 ரன்கள் குவித்த நிலையில் வெளியேறினார்.
இறுதியில் சென்னை அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்கள் எடுத்தது.
ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக ஹர்ஷல் பட்டேல் 4 விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ், உனத்கட் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.