IPL Match 12 – மும்பை அணிக்கு 117 ஓட்டங்கள் இலக்கு
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை-கொல்கத்தா அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியில் அஸ்வானி குமார் அறிமுகமானார்.
அதன்படி கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுனில் நரைன் மற்றும் டிகாக் களமிறங்கினர். இதில் நரைன் 0 ரன்னிலும் டி காக் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் மும்பை அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.
இறுதியில் கொல்கத்தா அணி 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்கள் எடுத்தது. மும்பை அணி தரப்பில் அஸ்வனி குமார் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.





