IPL Match 01 – அதிரடியாக முதல் வெற்றியை பதிவு செய்த RCB

ஐபிஎல் 2025 சீசன் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கலைநிகழ்ச்சியுடன் இன்று கோலாகலமாக தொடங்கியது.
இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக ஆர்சிபி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் குயின்டான் டி காக், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். டி காக் 4 ரன்களில் வெளியேறினார்.
தொடர்ந்து ரகானே சிறப்பாக விளையாடினார் ரகானே, சுனில் நரைன் இருவரும் இணைந்து அதிரடி காட்டினர்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி வீரர்கள் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடினர்.
ஆர்சிபி அணி 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு இழந்து 177 ரன்கள் எடுத்தது. இதனால் ஆர்சிபி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடக்க ஆட்டக்காரர்கள் விராட் கோலி, பில் சால்ட் இருவரும் அரைசதம் விளாசி அசத்தினர்.