அறிவியல் & தொழில்நுட்பம்

iPhone 17 – வாடிக்கையாளர்களை அசர வைக்கும் சிறப்பு அம்சங்கள்

ஆப்பிள் ஐபோன் 17 மாடலில் குறிப்பிடத்தக்க வகையில், ஏ19 பயோனிக் சிப் மூலம் இதன் செயல்திறனை அதிகரிக்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது ஏஐ தொழில்நுட்பம், வேகம் மற்றும் பேட்டரி ஆயுளை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஆப்பிள் ஸ்மார்போனான ஐபோன் 17 தொடர் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெக் எக்ஸ்பர்ட்களும் ஐபோனின் டிசைன் மற்றும் அதில் இடம்பெறவிருக்கும் முக்கிய அம்சங்கள் குறித்து அவ்வப்போது சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது ஆப்பிள் தனது ஐபோன் மாடல்களின் டிசைன்களை மறுஉருவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன.

அதாவது, ஆப்பிள் அதன் வரவிருக்கும் புதிய மாடல்களை தட்டையான வடிவமைப்பில், மீண்டும் மெல்லியதாக உருவாக்கக்கூடும், இது கூர்மையான விளிம்புகளுடன் இருக்கலாம். அதிலும், ப்ரோ மாடல்களில் புதுப்பிக்கப்பட்ட கேமரா பம்ப்கள் மற்றும் நீடித்த டைட்டானியம் அலாய் கட்டமைப்புகள் போன்றவை இடம்பெறலாம் என்றும் கூறப்படுகிறது.

ஏ19 பயோனிக் சிப் மூலம் இதன் செயல்திறனை அதிகரிக்கவும் ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது ஏஐ தொழில்நுட்பம், வேகம் மற்றும் பேட்டரி ஆயுளை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிளின் அடுத்த ஐபோன் வெளியீட்டிற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக தகவல்கள் கசிந்த வண்ணமாகவே உள்ளன. அதிலும் குறிப்பாக, வரவிருக்கும் ஆப்பிள் ஸ்மார்ட்போன்களில், அதன் முதன்மை மாடல்களின் டிசைனில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வர ஆப்பிள் திட்டமிட்டிருப்பதாகவும் மற்றும் வரவிருக்கும் புதிய அம்சங்கள் குறித்த தகவல்களும் வேகமாக பரவி வருகின்றன.

டிசைனைப் பொறுத்த வரையில், ஆப்பிள் தற்போதைய ஐபோன் 15 டிசைனில் இருந்து, குறிப்பிடத்தக்க மாற்றத்தை கொண்டு வர பரிசீலித்து வருவதாக ஆரம்ப அறிக்கைகள் கூறுகின்றன.
இதில், சில அறிக்கைகள் முந்தைய ஐபோன் மாடல்களை நினைவூட்டும் வகையில், வரவிருக்கும் ஐபோனின் முதன்மை மாடலானது ஒரு தட்டையான டிசைனுக்கு மாறுவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாகக் கூறுகின்றன. அதிலும், கூர்மையான விளிம்புகளுடன் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட சதுரமான தோற்றத்துடன் இருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், இதனுடன் ப்ரோ மாடல்களில் ஒரு புதுப்பிக்கப்பட்ட கேமரா பம்ப்களும் இடம்பெறலாம் என்றும் வதந்திகள் தெரிவிக்கின்றன. பரவி வரும் மற்றொரு தகவல்படி, ஐபோன் 17 ஏர், பிக்சல் போன்ற கேமரா விசரைப் பெறுகிறது. மேலும், ப்ரோ பதிப்பில் ஒரு நீளமான கேமரா ஐலேண்டும் இடம்பெறலாம்.
அதே நேரத்தில், உயர்தர “ப்ரோ” மாடல்களுக்காக, அதிகம் நீடித்த மற்றும் ஸ்கிராட்ச்-ரெசிஸ்டண்ட் அம்சம் கொண்ட டைட்டானியம் அலாய் உள்ளிட்ட புதிய பொருட்களை இணைக்க ஆப்பிள் சோதனை மேற்கொண்டு வருவதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

செயல்திறனைப் பொறுத்த வரையில், ஐபோன் 17 ஆப்பிளின் அடுத்த தலைமுறை ஏ-சீரிஸ் சிப்பை, அதிலும், ஏ19 பயோனிக் சிப்பைக் கொண்டிருக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. இந்த சிப் குறிப்பிடத்தக்க வகையில், மேம்பட்ட செயல்திறன் மற்றும் ஆற்றலை வழங்குவதால், இது வேகமாகவும், மேம்பட்ட கிராபிக்ஸ் திறனையும், நீண்ட பேட்டரி ஆயுளையும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த சிப், ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் மற்றும் ஒருங்கிணைக்கும் வகையில் மேம்பட்ட செயலாக்கத் திறனை கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆபிள் அசிஸ்டெண்ட்டான சிரி, கேமரா செயல்திறன் மற்றும் ஆக்மென்டட் ரியாலிட்டி அனுபவங்கள் போன்ற அம்சங்களை மேலும் மேம்படுத்தும்.

கேமராவைப் பொறுத்த வரையில், குறைந்த வெளிச்சத்தில் சிறப்பாக செயல்படும் விதமாக, செயல்திறனை மேம்படுத்தும் வகையில் பெரிய அளவு மற்றும் அதிகரித்த டைனமிக் வரம்பைக் கொண்ட முக்கிய சென்சாரில் சாத்தியமான மேம்பாடுகள் கொண்டு வரப்படும் என்று கூறப்படுகிறது. ப்ரோ மாடல்களில் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் அறிமுகப்படுத்தப்படும் என்றும், இது கணிசமாக மேம்படுத்தப்பட்ட ஆப்டிகல் ஜூம் திறன்களை வழங்கும் என்றும் வதந்திகள் தெரிவிக்கின்றன.

(Visited 2 times, 2 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்