இந்தியா செய்தி

அசாமில் நாளை இணைய சேவைகள் தற்காலிகமாக முடக்கம்

மூன்றாம் வகுப்பு அரசுப் பணிகளுக்கான எழுத்துத் தேர்வில் ஆன்லைன் மோசடியைத் தவிர்ப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1:30 மணி வரை மாநிலம் முழுவதும் மொபைல் இணையச் சேவைகள் நிறுத்தப்படுவதாக அசாம் அரசு அறிவித்துள்ளது.

தேர்வின் போது ஏதேனும் முறைகேடுகளைத் தவிர்க்க, “இணையத்தை தற்காலிகமாக முடக்குவது விவேகமானது” என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

மாநிலம் முழுவதும் 2,305 தேர்வு மையங்களில் 11,00,000க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் பொதுத் தேர்வில் பங்கேற்க உள்ளனர்.

கடந்த காலங்களில் சில விண்ணப்பதாரர்கள் இணைய இணைப்பை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு Facebook, WhatsApp, X(Twitter), Telegram, YouTube போன்றவற்றைப் பயன்படுத்துவதை அவதானிக்க முடிந்தது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!