செய்தி

ஓய்வை அறிவித்த இந்திய வீரர் ஷிகர் தவான்!

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 13 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வந்தார் தவான்.

ஷிகர் தவான் இந்தியாவிற்காக இதுவரை 34 டெஸ்ட் போட்டிகள், 167 ஒருநாள் போட்டிகள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2010ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார்.

38 வயதான தவான் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தற்போது அறிவித்துள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

“இன்று நான் திரும்பிப் பார்க்கும்போது, ​​​​எனக்கு நல்ல நினைவுகள் மட்டுமே உள்ளன. எனக்கு ஒரே ஒரு கனவு இருந்தது, அது இந்தியாவுக்காக விளையாட வேண்டும், நான் அதை அடைந்தேன்” – தவான்.

“நான் நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடிய எனது அணிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனக்கு இன்னொரு குடும்பம் கிடைத்தது, எனக்கு பெயர், புகழ் மற்றும் ரசிகர்கள் அனைவரின் அன்பும் கிடைத்தது” – தவான்.

ஷிகர் தவான் கடைசியாக 2018ம் ஆண்டு இந்தியாவிற்காக டெஸ்டில் விளையாடினார். 2022ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் கடைசியாக இந்தியாவிற்காக விளையாடினார். 2021ம் ஆண்டு கடைசியாக சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடினார்.

 

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!