அமெரிக்காவில் தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த இந்தியர்!
அமெரிக்காவில் தவறுதலாக சுமார் 43 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த இந்தியரை நாடு கடத்த இரு நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளன.
1983 ஆம் ஆண்டு சுப்பிரமணியம் என்பவர் கொலை குற்றச்சாட்டு மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
கொலை குற்றச்சாட்டில் அவர் விடுவிக்கப்பட்டாலும், போதைப்பொருள் குற்றச்சாட்டில் தண்டனை அனுபவித்தார்.
இதற்காக இரண்டரை முதல் ஐந்து ஆண்டுகள் வரை தனித்தனி சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தண்டனை அவரது ஆயுள் தண்டனையுடன் ஒரே நேரத்தில் அனுபவிக்கப்பட இருந்தது.
இந்நிலையில் தண்டனை காலத்திற்கு அதிகமாக 43 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து புதிய ஆதாரங்களின் அடிப்படையில் அக்டோபரில் விடுவிக்கப்பட்டார்.
ஆனால் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட உடனேயே, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதற்காக அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்தால் (ICE) காவலில் வைக்கப்பட்டார். லூசியானாவின் அலெக்ஸாண்ட்ரியாவில் (Alexandria, Louisiana) உள்ள ஒரு குறுகிய கால தங்குமிட மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவரை நாடு கடத்துவது தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் குடிவரவு மேல்முறையீட்டு வாரியம் முடிவு செய்யும் வரை அவரது நாடுகடத்தலை நிறுத்தி வைக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே நாளில், பென்சில்வேனியாவில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் அவரை நாடு கடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





