சிங்கப்பூர் பறந்துகொண்டிருந்த விமானத்தில் பணிப்பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த இந்தியர்

சிங்கப்பூர் பறந்துகொண்டிருந்த விமானத்தில் பணிப்பெண்ணிடம் தவறாக நடந்துக் கொண்ட இந்திய நாட்டவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
28 வயதுமிக்க விமான பணிப்பெண்ணிடம் சீண்டலில் அவர் ஈடுப்பட்டதாவும், இந்நிலையில் அவர் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விமான பணிப்பெண், பெண் பயணி ஒருவரை கழிப்பறைக்கு அழைத்துச் சென்றுள்ளார், அப்போது கழிப்பறையின் தரையில் ஒரு டிஷ்யூ பேப்பர் கிடந்துள்ளது.
அதை எடுக்க பணிப்பெண் குனிந்தபோது, குறித்த நபர் பணிப்பெண்ணிடம் தவறாக நடந்துக் கொண்டதுடன் தன்னோடு சேர்த்து கழிவறைக்குள் தள்ளியதாக முதற்கட்ட விசாரணையில் சொல்லப்பட்டுள்ளது.
அப்போது உடன் இருந்து பார்த்த பெண் பயணி, பணிப்பெண்ணை உடனடியாக கழிப்பறையிலிருந்து வெளியே கொண்டுவர உதவினார். பின்னர் இந்த சம்பவம் விமானக் குழு மேற்பார்வையாளருக்கு தெரிவிக்கப்பட்டது.
அதன் பின்னர், விமானம் சாங்கி விமான நிலையத்தை வந்து அடைந்ததும் விமான நிலைய பொலிஸ் பிரிவின் அதிகாரிகள் அந்த நபரை கைது செய்தனர்.
இந்தக் குற்றத்திற்கு குறித்த நபருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம், பிரம்படி அல்லது ஏதேனும் சேர்த்தும் விதிக்கப்படலாம்.