வெங்காய ஏற்றுமதி தடையை நீடித்த இந்தியா
இந்தியா வெங்காய ஏற்றுமதி மீதான தடையை காலவரையின்றி நீட்டித்துள்ளது
இதன்னால் சில வெளிநாட்டு சந்தைகளில் அதிக விலையை அதிகரிக்க உள்ளது.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டுச் சந்தையில் அதிக அளவில் வெங்காயம் கையிருப்பை வைக்கவும் நோக்கமாக கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய காய்கறி ஏற்றுமதியாளரான இந்தியா விதித்துள்ள தடை டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் காலாவதியாகவிருந்தது.
ஏற்றுமதி கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதில் இருந்து உள்ளூர் விலை பாதியாகக் குறைந்துள்ளதால், இந்த சீசனில் விளைச்சல் அதிகமாக இருப்பதால், இந்தத் தடை நீக்கப்படும் என்று வர்த்தகர்கள் எதிர்பார்த்தனர்
எனினும், மறு அறிவிப்பு வரும் வரை இந்தத் தடை தொடரும் என்று வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் அரசு உத்தரவு பிறப்பித்தது.
எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஏற்றுமதி தடையை காலவரையின்றி மேலும் நீடிக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இலங்கையில் பெரிய வெங்காயத்தின் விலை வேகமாக அதிகரித்து வருவதற்கு இந்தியா விதித்துள்ள தடையே பிரதான காரணமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.