காங்கோவில் முதல் முறையாக பெண் ஒருவர் பிரதமராக நியமனம்!

காங்கோ ஜனநாயகக் குடியரசின் ஜனாதிபதி பெலிக்ஸ் ஷிசெகெடி திங்களன்று நாட்டின் முதல் பெண் பிரதமரை நியமித்துள்ளார்.
ருவாண்டாவின் எல்லையை ஒட்டிய நாட்டின் கனிம வளம் மிக்க கிழக்கில் வன்முறை மோசமடையும் நேரத்தில் இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.
நியமனத்தை தொடர்ந்து பிரதமர் ஆற்றிய உரையில் அமைதி மற்றும் வளர்ச்சியை நோக்கிச் செயல்படுவதாக உறுதியளித்தார்.
கிழக்கு காங்கோ நீண்ட காலமாக 120 க்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய குழுக்களால் கைப்பற்றப்பட்டது, 07 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 17 times, 1 visits today)