ஐரோப்பா செய்தி

பேரழிவின் விளிம்பிலிருந்து மீண்டெழுந்த இங்கிலாந்தின் பார்ன்ஸ்லி நகரம்

கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருந்த இங்கிலாந்தின் பார்ன்ஸ்லி (Barnsley) நகரம் தற்போது மறுமலர்ச்சி அடைந்துள்ளது

30 ஆண்டுகளுக்கு முன்பு நிலக்கரி சுரங்கத் தொழில் சரிந்ததைத் தொடர்ந்து பார்ன்ஸ்லி (Barnsley) நகரத்திர் ஏற்பட்ட ஆயிரக்கணக்கான வேலை இழந்ததால் நகரம் சரிவின் விளிம்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டில் இதுவரை 9 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் பார்ன்ஸ்லியை வந்தடைந்துள்ளனர்.

இது யார்க் போன்ற முக்கிய நகரங்களுடன் போட்டியிடும் அளவிற்கு வளர்ச்சியென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்ன்ஸ்லி 1086 ஆம் ஆண்டு டோம்ஸ்டே புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட பழமையான நகரம். நீண்ட காலம் நிலக்கரி சுரங்கமே அதன் முக்கிய அடையாளமாக இருந்தது. சுரங்கங்கள் மூடப்பட்ட பிறகு 20,000 க்கும் மேற்பட்ட வேலைகள் இழந்தன.

இந்த நிலையை மாற்ற நகர கவுன்சில் மறுசீரமைப்பு திட்டங்களை தொடங்கியது. “இங்கிலாந்தின் முன்னணி சந்தை நகரமாக” பார்ன்ஸ்லியை மாற்றுவதே இலக்காக இருந்தது.

2002 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பொது ஆலோசனையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

மக்களின் கோரிக்கைகளை அடிப்படையாக கொண்டு சந்தை, சினிமா, நூலகம், கடைகள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் மேம்படுத்தப்பட்டன.

இதன் விளைவாக, பார்ன்ஸ்லி இன்று ஒரு வெற்றிகரமான நகர மறுமலர்ச்சி எடுத்துக்காட்டாக மாறியுள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!