இலங்கையின் சில பகுதிகளில் கடும் மழை : முக்கிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு!

இலங்கை – பொலன்னறுவை மாவட்டம் உள்ளிட்ட மகாவலி பி வலயத்தில் பல நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, பல முக்கிய நீர்த்தேக்கங்கள் மற்றும் குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதன்படி, கந்தளாய் நீர்த்தேக்கத்தின் 10 வான் கதவுகளும், கவுடுல்ல குளத்தின் 2 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
இதேவேளை நாட்டில் தற்போது நிலவி வரும் கடும் மழையுடனான வானிலை காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 2,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)