பிரான்ஸில் 80 பேரின் உயிரை பறித்த வெப்பம்

பிரான்ஸில் கடந்த ஜூலை மாதத்தில் 80 பேர் மரணித்துள்ளதாக பொது சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
ஜூலை மாதத்தில் நிலவிய கடும் வெப்பம் காரணமாக இந்த மரணங்கள் பதிவாகியுள்ளது.
பிரான்ஸின் தெற்கு பிராந்தியங்கள் முழுவதும் கடந்த ஜூலை மாதத்தில் கடுமையான வெப்பம் நிலவியிருந்தது.
இந்த வெப்பம் காரணமாக 80 வரையான மரணங்கள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த மரணம் ஜூலை 7 ஆம் திகதி தொடக்கம் 13 ஆம் திகதி வரையான ஒரு வாரகாலத்தில் பதிவாகியுள்ளது.
அதேவேளை, கடும் வெப்பம் காரணமாக இரு விபத்துக்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 44 times, 1 visits today)