அமெரிக்காவில் ஆராய்ச்சியாளர்களை குழப்பமடைய வைத்த ஆலங்கட்டி
அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் கணடுபிடிக்கப்பட்ட ஆலங்கட்டியால் ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
17.78 செண்டிமீட்டர் நீளத்துக்கு ஆலங்கட்டி காணப்பட்டிருக்கிறது. வீதி ஓரத்தில் கிடந்த அது பார்ப்பதற்கு அன்னாசிப்பழத்தைப் போல் பெரிதாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
30 ஆண்டுகளாக மழை பற்றிய ஆய்வில் இருக்கும் கேஸ்டர் கேஸ் மற்றும் எமி கேஸ்டர் ஆகிய இருவரும் இதனை கண்டுபிடித்தனர்.
ஆனால் இதுதான் நான் முதல்முறையாகப் பார்க்கும் மிகப் பெரிய ஆலங்கட்டி என்று கேஸ்டர் கூறினார்.
அந்த ஆலங்கட்டியின் அளவு மாநிலத்தின் புதிய சாதனையாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
இதற்குமுன்னர் 2021இல் ஹோன்டோவில் (Hondo) கண்டுபிடிக்கப்பட்ட16.25 செண்டிமீட்டர் ஆலங்கட்டி மாநிலத்தின் சாதனை அளவாகக் கருதப்பட்டது.
அமெரிக்காவைப் பொறுத்தவரை மிகப் பெரிய ஆலங்கட்டி 2010இல் கண்டுபிடிக்கப்பட்டது. தென் டக்கோத்தாவில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த ஆலங்கட்டியின் நீளம் 27.94 செண்டிமீட்டர் ஆகும்.