இந்தியா செய்தி

எச்.ராஜாவுக்கு 6 மாத சிறை தண்டனை – சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எச்.ராஜா கடந்த 2018-ம் ஆண்டு பெரியார் சிலையை உடைப்பேன் என கருத்துத் தெரிவித்திருந்தார். அத்துடன் கனிமொழி எம்.பி.க்கு எதிராகவும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரிய எச்.ராஜாவின் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் மூன்று மாதங்களில் குறித்த வழக்கின் விசாரணையை முடிக்குமாறு சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது எச்.ராஜா குற்றவாளி என்றும் அவருக்கு தலா 6 மாத சிறைதண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எவ்வாறு இருப்பினும் எச்.ராஜாவுக்கு மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் காலஅவகாசத்தை நீதிமன்றம் வழங்கியுள்ளதால் எச்.ராஜா உடனடியாக சிறைக்கு செல்லவேண்டிய அவசியம் ஏற்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 32 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி