ஜெர்மனியில் பகுதி நேர பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
ஜெர்மனியில் பகுதி நேர பணிகளை செய்வர்களுடைய ஊதியத்தில் அதிகரிப்பு தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெர்மனி நாட்டில் பகுதி நேர வேலைகள் தொடர்பில் பல சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் பகுதி நேர வேலை செய்பவர்களுடைய ஆக கூடிய ஊதியமாக 520 யூரோவாக காணப்படுகின்றது.
இந்நிலையில் 1.1.2024 முதல் பகுதி நேர பணிகளை மேற்கொள்வோர்களின் உழைப்பு தொகையானது 538 யூரோவாக உயர்வடையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஜெர்மனியில் எதிர் வரும் வருடம் அடிப்படை சம்பளமானது ஒரு மணித்தியாத்துக்கு 12 யுரோ 41 சென்ட் ஆக காணப்படுகின்றது.
பகுதி நேர பணிகளுக்கான ஊதியமாகது 538 யூரோவாக அதிகரிக்கப்படும் எனம் சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது. இதேவேளை, ஜேர்மனியில் பகுதிநேர வேலை செய்பவர்களின் எண்ணிக்கை 2022 இல் சுமார் 11.8 மில்லியனாக உயர்ந்துள்ளது. இது 2010 இல் 9.2 மில்லியனாக இருந்தது என்று மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.