தனுஷ்கோடி அருகே இலங்கை மீனவர்கள் ஐவர் கைது
 
																																		இராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தெரிவித்து இலங்கை மீனவர்கள் ஐந்து பேரை தமிழக கடலோர காவல்படை கைது செய்துள்ளதோடு படகொன்றையும் கைப்பறியுள்ளனர்.
இந்த நிலையில், இன்று(21) காலை தனுஷ்கோடி அடுத்த மூன்றாம் மணல் திட்டுப் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த இலங்கை ஃபைபர் படகு ஒன்றை பிடித்த இந்திய கடலோர காவல் படையினர் அதனை சோதனை செய்தனர். அப்போது அதில் ஐந்து இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டி இந்திய கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடித்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்த கடலோர காவல் படை கப்பற்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 17 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
