இலங்கை செய்தி

யாழில் தியாக தீபத்தின் நினைவேந்தலுக்கு தடை கோரி மனு தாக்கல்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி யாழ்ப்பாண பொலிஸாரினால் யாழ். நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தியாக தீபம் திலீபனின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த தடை விதிக்க கோரி யாழ் , நீதவான் நீதிமன்றில் பொலிஸார் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த மனு மீதான விசாரணைகளை எதிர்வரும் 18ஆம் திகதி முன்னெடுப்பதாகவும் அன்றைய தினம் மனுவில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள செல்வராசா கஜேந்திரன் மற்றும் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோரை மன்றில் முன்னிலையாகுமாறு மன்று கட்டளையிட்டுள்ளது.

(Visited 2 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை