இந்தியா

மேற்கு வங்க சிறைகளில் கர்ப்பமாகும் பெண் கைதிகள்; இதுவரை 196 குழந்தைகள் பிறப்பு!

மேற்கு வங்க சிறைகளில் பெண் கைதிகள் கர்ப்பமாக இருப்பதாகவும், இதுவரை 196-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சிறைகளில் சீர்திருத்தங்கள் மற்றும் சீர்திருத்த இல்லங்கள் தொடர்பான வழக்குகளைக் குறிப்பிடும்போது, சிறைகளில் பெண் கைதிகள் கர்ப்பமாக இருப்பதாகவும், இதுவரை 196-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.’அமிகஸ் க்யூரி’ (நீதிமன்றத்துக்கு தகவல் அளிக்கும் நபர் அல்லது அமைப்பு) சார்பில் இந்த தகவல் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு தீவிரமானது என கூறியுள்ள, தலைமை நீதிபதி டி. எஸ். சிவஞானம், நீதிபதி சுப்ரதிம் பட்டாச்சார்யா ஆகியோர், திங்களன்று டிவிஷன் பெஞ்சில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபடும் என தெரிவித்துள்ளனர்.

Female Prisoners Getting Pregnant, 196 Babies Living In Custody: Plea In  Calcutta HC Seeks Prohibition On Entry Of Male Employees In Female Prisoners'  Enclosure

‘அமிகஸ் க்யூரி’ தகவல் படி, சிறை ஊழியர்கள் பெரும்பாலும் ஆண்களாக உள்ளனர். அதனால் பெண் கைதிகள் வைக்கப்பட்டுள்ள சிறைக் கூடங்கள், சீர்திருத்த இல்லங்களில் ஆண் ஊழியர்கள் முழுமையாக தடை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.இதனை கேட்டுக்கொண்ட தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம், “எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்ட பிரச்சினை தீவிரமானது. இந்த விஷயங்கள் அனைத்தையும் குற்றவியல் விஷயங்களை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றுவது பொருத்தமானது என நாங்கள் கருதுகிறோம்” என்றார்.

See also  கர்நாடகாவில் மூச்சுப்பயிற்சி நுட்பத்தைப் பயன்படுத்தி உயிர் பிழைத்த யோகா ஆசிரியை

மேற்கு வங்க மாநிலத்தில் பெண் கைதிகள் கர்ப்பமாக உள்ளதும், சிறைகளில் 196-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ள சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

(Visited 4 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content