அமெரிக்காவின் முக்கிய குற்றவாளியை பிடித்த இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த FBI அதிகாரி

ஆறு வயது மகனைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு, 250,000 டாலர் பரிசுத் தொகையுடன் ஏஜென்சியின் ‘டாப் 10 மோஸ்ட் வான்டட்’ பட்டியலில் இடம்பெற்ற ஒரு பெண்ணைப் பிடித்து நாடு கடத்தியதற்காக, FBI அதிகாரி ஒருவர் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்து, டல்லாஸில் உள்ள FBI அலுவலகத்தின் சிறப்பு முகவர் ஆர். ஜோசப் ரோத்ராக், “இந்த வெற்றிகரமான முடிவு FBIக்கும் எங்கள் உள்நாட்டு மற்றும் உலகளாவிய கூட்டாளர்களுக்கும் இடையிலான சர்வதேச ஒத்துழைப்பால் கிடைத்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.
சிண்டி ரோட்ரிக்ஸ் சிங் இந்திய அரசாங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டார், அமெரிக்காவிற்கு வந்த பிறகு, அவர் டாரன்ட் கவுண்டியில் உள்ள ஷெரிப் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
அவர் கொலைக் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், டெக்சாஸில் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்.
40 வயதான ரோட்ரிக்ஸ் சிங், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் அல்ல, டல்லாஸில் பிறந்த ஒரு வெள்ளை ஹிஸ்பானிக் என்று FBI குறிப்பிட்டுள்ளது.