Site icon Tamil News

3,000 கிராம உத்தியோகத்தர்களை நியமிக்க விரைவில் பரீட்சை: தினேஷ் குணவர்தன

கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டி பரீட்சை டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நடத்தப்பட்டு மூன்று மாதங்களுக்குள் நியமனங்கள் பூர்த்தி செய்யப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் வவுனியா மாவட்ட செயலகத்தில் “புதிய கிராமம் – புதிய நாடு” தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்து நடைபெற்ற நிகழ்விலே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், 3000 கிராம அலுவலர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் சட்டரீதியாக அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் தேர்வில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

கிராம உத்தியோகத்தர்களின் வெற்றிடங்கள் உள்ள தொலைதூர பிரதேசங்களில் விசேட தகைமையின் அடிப்படையில் பரீட்சையை நடாத்திய பின்னர் வெற்றிடங்கள் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version