இங்கிலாந்தை உலுக்கிய நிலநடுக்கங்கள் – ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள் பதிவு!
2025 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் 300 க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக பிரித்தானியாவின் புவியியல் ஆய்வுத் தரவு குறிப்பிட்டுள்ளது.
பெர்த்தில் (Perth) உள்ள லோச் லியோன் (Loch Lyon) மற்றும் ஸ்காட்லாந்தின் கின்ரோஸ் (Kinross) அருகே சில மணிநேர இடைவெளியில் இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் பதிவாகியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
டிசம்பர் 18, 2025 வரை, இங்கிலாந்து முழுவதும் 309 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. ஸ்காட்லாந்தில் உள்ள பெர்த்ஷயர் (Perthshire), மேற்கு ஹைலேண்ட்ஸ் (Highlands) , வேல்ஸின் (Wales) தெற்குப் பகுதிகள், இங்கிலாந்தில் உள்ள யார்க்ஷயர் (Yorkshire) மற்றும் லங்காஷயர் (Lancashire) ஆகிய பகுதிகள் ஒட்டுமொத்தமாக அதிக நில அதிர்வு நடவடிக்கைகளைப் பதிவு செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் லோச் லியோன் (Loch Lyon) அருகே மொத்தம் 34 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக அறிக்கை தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்த ஆண்டு, நிலநடுக்கம் தொடர்பில் 1,320 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





