செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கும் இனி சாரதி அனுமதிப்பத்திரம்!
முழு செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு இலகுரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2022 ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதியன்று அமைச்சரவை தீர்மானத்தின்படி, கம்பஹா மாவட்டத்தை மையமாகக் கொண்டு முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இதன்படி, அதன் பெறுபேறுகளுக்கு அமைய இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளின் பேரில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது
(Visited 29 times, 1 visits today)





