ஆசியா

‘நெருப்புடன் விளையாட வேண்டாம்’- பிலிப்பைன்ஸுக்கு கடும் கண்டனம் விடுத்துள்ள சீனா!

தைவானின் அதிபராக தேர்வாகியுள்ள லாய் சிங்-டெ உடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் கூறினார். இதற்கு பிலிப்பைன்ஸ் தூதரை நேரில் வரவழைத்து, சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தைவான் அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் லாய் சிங்-டெ கடந்த சனிக்கிழமை வெற்றி பெற்றார். தைவானை சீனா, தனது நாட்டின் ஒரு பகுதியாகக் கருதி வருகிறது. தேவைப்பட்டால் பலவந்தமாக தைவானை கைப்பற்றுவோம் எனவும் சீனா தெரிவித்துள்ளது.

தைவானை தனி நாடாக அங்கீகரிக்கும் நாடுகளுடன் சீனா, ராஜீய ரீதியான தொடர்பை விரும்பவில்லை. மேலும், வெளிநாடுகள் தைவானை நேரடியாக தொடர்பு கொள்வதையும் சீனா எதிர்க்கிறது. இந்நிலையில், பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் நேற்று, சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், தைவானில் லாய் சிங்-டெ தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவரது தலைமையில் தைவானுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்பார்ப்பதாகவும் பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் தெரிவித்திருந்தார்.

தைவான் புதிய ஜனாதிபதி லாய் சிங் டி - Dinasuvadu

இதனால் அதிருப்தி அடைந்த சீனா, அந்நாட்டில் உள்ள பிலிப்பைன்ஸ் தூதரை நேரில் வரவழைத்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக பிலிப்பைன்ஸ் அரசின் விளக்கத்தை பெற்று, தெரிவிக்குமாறும் சீனா பிலிப்பைன்ஸ் தூதரிடம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், “சீனாவுக்கான பிலிப்பைன்ஸ் தூதர் சீன வெளியுறவுத் துறை துணை அமைச்சர் நோங் ரோங்-ஐ சந்திக்க, இன்று வரவழைக்கப்பட்டார். அவரிடம், தைவான் விவகாரம் தொடர்பாக பிலிப்பைன்ஸ் அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தைவானுக்கு வாழ்த்து தெரிவித்தால் சீனா கடுமையாக அதிருப்தி அடைந்துள்ளது. இச்செயலை வன்மையாக சீனா எதிர்க்கிறது. தைவான் பிரச்சினையில் நெருப்புடன் விளையாட வேண்டாம்.

தைவான் தொடர்பான பிரச்சினைகளில் தவறான கருத்துகள், செயல்களை உடனடியாக நிறுத்தவும். தைவான் சுதந்திரத்துக்காக பிரிவினைவாத சக்திகளுக்கு தவறான சமிக்ஞைகளை வெளியிடுவதை பிலிப்பைன்ஸ் உடனடியாக நிறுத்த வேண்டும். தைவான் பிரச்சினையை புரிந்துகொள்ள அதன் வரலாற்றை ஃபெர்டினாண்ட் மார்கோஸ் நன்றாக படித்து தெரிந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறோம். அப்போதுதான் அவரால் சரியான முடிவுகளை எடுக்க முடியும்” என்றார்.

(Visited 10 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்