இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

சிகிச்சை பலனின்றி டேன் பிரியசாத் உயிரிழப்பு – உறுதிப்படுத்திய பொலிஸார்

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சிகிச்சை பலனின்றி டேன் பிரியசாத் உயிரிழந்ததாக தற்போது பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நேற்றிரவு வெல்லம்பிட்டி, மீதொட்டமுல்ல பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தற்போது அறிவித்துள்ளனர்.

அரசியல் செயற்பாட்டாளர் டொன் பிரியசாத் செவ்வாய்க்கிழமை இரவு துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

கொழும்பு, மீதொட்டமுல்லையில் உள்ள ‘லக்சந்த செவன’ அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலேயே டொன் பிரியசாத் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த டேன் பிரியசாத் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக நேற்றிரவு செய்தி வெளியாகி இருந்த போதிலும் பொலிஸார் அதனை பின்னர் மறுத்திருந்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!