அறிந்திருக்க வேண்டியவை அறிவியல் & தொழில்நுட்பம் இந்தியா

வானில் நடந்த அதிசயம்.. – நேரில் பார்த்து பீதியில் உறைந்த மக்கள்

இந்தியாவில் தாம்பரம் சுற்றுவட்டாரப்பகுதியில் வானில் தோன்றிய மர்ம ஒளியால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மழை பெய்வதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு திடீரென வானில் தோன்றிய ஒளிகள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டு இருந்த நிலையில் சடுதியாக ஒரே நேர்கோட்டுக்கு வந்து திடீரென மறைந்துள்ளன.இதன்போது, கடும் காற்றும் வீசியதுடன், மழை பெய்தமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த ஒளிகள் வானில் டாச் லைட் (Torchlight) அடிப்பதைப்போன்று இருந்ததாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, மொரோக்கோவில் நிலநடுக்கம் ஏற்படுவதற்குமுன் வானத்தில் மர்மமான ஒளி தென்பட்டதாக சமூக ஊடகத் தளங்களில் வீடியோ ஒன்று பகிரப்படுகிறது.

மேலும், மெக்ஸிகோ அரசு “மனிதர் அல்லாத” வேற்றுகிரகவாசிகளின் சடலங்கள் என்று நம்பப்படும் இரண்டு சடலங்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 13) பொதுமக்களுக்குக் காட்டப்பட்டன. இந்த சடலங்கள் 3குறைந்தது 1,000 ஆண்டுகள் பழமையானவை என்று கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியை மெக்சிகன் பத்திரிகையாளர் மற்றும் யூஃபாலஜிஸ்ட் ஜெய்ம் மௌசன் வழிநடத்தினார். அவர் பல தசாப்தங்களாக வேற்று கிரக நிகழ்வுகளை ஆராய்ந்து வருகிறார். மேலும் இந்த நிகழ்வு மெக்சிகன் விஞ்ஞானிகளால் இணைந்து நடத்தப்பட்டது.

இந்த மம்மி செய்யப்பட்ட மாதிரிகள் அனைவரும் பார்க்கும் வகையில் பெட்டிகளில் வைக்கப்பட்டன. இந்த ஏலியன் மம்மி பெருவின் குஸ்கோவில் இருந்து மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆகவே ஏலியன்கள் இருக்கின்ற கதையை நம்பும் வகையில் இந்த ஏலியன் மம்மி உள்ளது.

இவ்வாறான நிலையில் சென்னையில் மக்களை பீதியில் ஆழ்த்தியது ஏலியன்களின் ஒளியா அல்லது வேறு ஏதோனும் ஒளியா என குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

https://twitter.com/ThanthiTV/status/1702142312317428125

 

(Visited 13 times, 1 visits today)

MP

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே