இலங்கை

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றம்!

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று (04) திருத்தியமைக்கப்படவுள்ளது.

மாதாந்த கட்டண திருத்தத்தின் பிரகாரம் இவ்வருட எரிவாயு விலை திருத்தம் தொடர்பான விலைகள் இன்று அறிவிக்கப்படும் என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

எனினும் தற்போது உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதோடு ஒரு மெட்ரிக் தொன் 85 அமெரிக்க டொலர்களுக்கு மேல் அதிகரித்துள்ளது. அந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, எரிவாயு விலை திருத்தம் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

கடந்த மாதம் இடம்பெற்ற விலைத் திருத்தத்தின் பிரகாரம், 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலையை 204 ரூபாவினாலும், 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலையை 83 ரூபாவினாலும், 2.3 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலையை 37 ரூபாவினாலும் குறைக்க லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!