சுவிட்சர்லாந்தில் ஏரிகளில் ஏற்பட்ட மாற்றம் – பழுப்பு நிற சிப்பிகளால் நெருக்கடி
சுவிட்சர்லாந்து நாட்டு ஏரிகளில் பழுப்பு நிற சிப்பிகள் அதிகளவில் பெருகிவருவதால் மக்கள் கடும் நெருக்கடிக்குளளாகியுள்ளனர்.
இதனால் மீன்கள் மற்றும் இறால்களின் உற்பத்தி குறைந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
கருங்கடலை பூர்வீகமாக கொண்ட பழுப்பு நிற சிப்பிகள், அதில் கலக்கும் ரைன் ஆறு வழியாக சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு 10 ஆண்டுகளுக்கு முன் சென்றது.
அங்கிருந்து படகுகளுடன் ஒட்டிக்கொண்டு ஏரிகளுக்கு சென்றிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆயிரக்கணக்கான முட்டைகளை இடக்கூடிய சிப்பிகள், மீன்களின் உணவான மிதவை நுண்ணியிரிகளை உட்கொள்வதால் மீன்களின் எண்ணிக்கை குறைந்துவருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
(Visited 4 times, 1 visits today)