இந்தியா

பா.ஜனதாவின் சார்பு அணிகளாக சி.பி.ஐ. அமலாக்கத்துறை செயல்படுகின்றன! உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

பா.ஜனதாவின் சார்பு அணிகளாக சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஆகியவை செயல்படுகின்றன என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாகை தனியார் கல்லூரி மைதானத்தில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாகை மாவட்ட தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்ததாவது,

அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் வீடுகளில் சோதனை நடந்தது. ஆனால், முடிவில் யாரையும் பா.ஜனதா அரசு யாரையும் கைது செய்யவில்லை.

பா.ஜனதா எத்தனை சோதனைகள் நடத்தினாலும் தி.மு.க.வின் கிளை செயலாளர் கூட பயப்படமாட்டான். . பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் மறு உருவமாக செயல்படுவேன்.என தெரிவித்துள்ளார்.

(Visited 6 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!