சிறப்பு அதிரடிப்படையினருக்காக (STF) புதிய வாகனங்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை ஒப்புதல்!
																																		சிறப்பு அதிரடிப்படைக்கு (STF) 125cc எஞ்சின் திறன் கொண்ட 100 மோட்டார் சைக்கிள்களையும் 50 முச்சக்கர வண்டிகளையும் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
சிறப்பு அதிரடிப்படை முழு நாட்டையும் உள்ளடக்கிய வகையில் 76 பிரதான முகாம்கள், 23 துணை முகாம்கள் மற்றும் 14 சிறப்பு பிரிவுகளை இயக்குகிறது.
இந்நிலையில் அவர்களின் கடமைகளை நிறைவேற்றுவதற்காக 314 மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றுள்ள 90 சதவீதமானவை 10 ஆண்டுகளுக்கும் மேலானவை என்றும் அவற்றில் சிலவற்றில் தொழில்நுட்ப குறைப்பாடுகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலைமை சிறப்பு அதிரடிப்படையின் கடமைகளை முன்னெடுக்க பாரிய தடையாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுதல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குழுக்களை அடக்குதல் போன்ற அதன் கடமைகளை திறம்படவும் நிறைவேற்றுவதற்கு மேற்படி வாகனங்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது.
        



                        
                            
