பெங்களூரு வந்த பிரிட்டன் மன்னர் சார்லஸ்
பிரிட்டன் மன்னர் சார்லஸ், அவரது மனைவி கமிலா ஆகியோர் புத்தாக்க சிகிச்சைக்காக பெங்களூரு வந்துள்ளனர்.
சார்லஸ் தம்பதி பெங்களூரு சவுக்யா சர்வதேச சுகாதார மையத்தில் சிகிச்சை பெறுகின்றனர். தனிப்பட்ட பயணம் என்பதால், இது பற்றிய தகவல்கள் எதுவும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.
யோகா பயிற்சி, புத்தாக்கப்பயிற்சி ஆகியவை இந்த மையத்தில் அரச குடும்ப தம்பதிக்கு அளிக்கப்படுகிறது. மையத்தில் வாக்கிங் செல்லும் தம்பதி, மற்ற நேரத்தில் இயற்கை வேளாண்மை வயல்களிலும், கால்நடை பண்ணையிலும் நேரத்தை செலவழிக்கின்றனர்.
டாக்டர் ஜான் மத்தாய் என்பவரால் வைட்பீல்டில் தொடங்கப்பட்ட இந்த மையத்தில் ஆயுர்வேதம், ஹோமியோபதி, யோகா, நேச்சுரோபதி சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. உடல் உபாதைகளுக்கு தீர்வு காண 30 வகையான தெரபிகளும் அளிக்கப்படுகின்றன.
மன்னராக சார்லஸ் இந்த மையத்துக்கு வருவது இது தான் முதல் முறை என்றாலும், மன்னர் பதவியேற்பதற்கு முன்னதாகவே அவர் 9 முறை இங்கு வந்து சிகிச்சை பெற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.