திருகோணமலையில் உத்தேச மீனவர் சட்டமூலம் தொடர்பிலான தெளிவூட்டல் பிரச்சாரம்
புதிதாக கொண்டு வரப்பட இருக்கின்ற உத்தேச மீனவர் சட்டமூலம் தொடர்பிலான தெளிவூட்டல் பிரச்சாரம் இன்று (13) திருகோணமலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட செயலாளர் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைமையில் பிரச்சார நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
பத்தாம் குறிச்சி பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டு திருக்கடலூர், வீரநகர்,பள்ளத்தோட்டம், ஜமாலியா ஆகிய மீனவ கிராம மக்களின் வீடுகளுக்கு சென்று மக்களுக்கு தெளிவூட்டல் மேற்கொள்ளப்பட்டது
இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட செயற்பாட்டாளர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.








