ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு உயர்வு – சமாளிக்க உதவ அமுலாகும் திட்டம்
 
																																		ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவின உயர்வைச் சமாளிக்க அரசாங்கம் உதவியுள்ளது.
வாடகை, எரிசக்திக் கட்டணம், உணவு விலை என அனைத்தும் உயர்ந்துள்ள வேளையில், பல ஆஸ்திரேலியர்கள் அதனைச் சமாளிக்கச் சிரமப்படுகின்றனர்.
விக்டோரியா மாநிலத்தில், புத்தம் புதிய ஆடைகளை இலவசமாக வழங்கி, தேவைப்படுவோருக்குக் கைகொடுக்கிறது ஒரு திட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கான இடத்தை பார்க்கும் போது அது ஆடைக்கடை போல் தெரிவதாக குறிப்பிடப்படுகின்றது. ஆனால் இந்த வாகனம் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குச் சென்று உயர்ந்து வரும் செலவுகளால் சிரமப்படும் மக்களுக்குப் புதிய ஆடைகளை நன்கொடையாக வழங்குகிறது.
தேவையற்ற ஆடைகளைக் குப்பைக் கூளத்திற்கு அனுப்புவதைத் தவிர்க்க விரும்பும் பிரபல ஆடை நிறுவனங்கள் இம்முயற்சிக்குக் கைகொடுக்கின்றன.
இது போன்ற சேவைகளுக்குக், குறிப்பாகக் கிராமப்புறங்களில் அதிகத் தேவை எழுந்துள்ளது.
அரரத் வட்டாரத்தில் குளிர்ந்த பருவநிலை காரணமாக ஏராளமான மக்கள் உதவி கோருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
        



 
                         
                            
