அயர்லாந்தில் புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த விடுதியை குறிவைத்து தாக்குதல்!
அயர்லாந்தில் புகலிட கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த விடுதியில் மர்ம கும்பல் ஒன்று பட்டாசுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
இதன் காரணமாக விடுதியில் தீவிபத்து ஏற்பட்டதாகவும், இதில் பல குழந்தைகள் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அயர்லாந்தின் ட்ரோகெடாவில் (Drogheda) நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய அங்குச் சென்ற அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறையினர் கட்டிடத்தில் இருந்தவர்களை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர்.
மேலும் தீ அணைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை “குற்றவியல் தாக்குதலை” கண்டிப்பதாக அயர்லாந்தின் நீதித்துறை அமைச்சர் ஜிம் ஓ’கல்லகன் (Jim O’Callaghan) தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு மாற்று தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.





