லெபனானில் நிதி நிறுவனம் மீது தாக்குதல்
லெபனானில் உள்ள நிதி நிறுவனத்தின் கிளைகளை குறிவைத்து இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
தெற்கு லெபனானில் உள்ள நபாதி மற்றும் டயர் நகரங்களில் நிதி நிறுவனத்தின் கிளைகள் தாக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹிஸ்புல்லாவின் ஆயுதங்களுக்கு நிதியுதவி செய்ததாக குற்றம் சாட்டியே இஸ்ரேல் இந்த வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
ஹிஸ்புல்லாா தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
தலைநகர் பெய்ரூட்டில் உள்ள 14 பகுதிகள் உட்பட லெபனானில் உள்ள 24 பகுதிகளை தாக்கப் போவதாக இஸ்ரேல் எச்சரித்திருந்தது.
ஹிஸ்புல்லா அமைப்பு நிதியுதவி பெறும் இடங்களை அண்மித்த பகுதிகளை விட்டு வெளியேறுமாறு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
(Visited 42 times, 1 visits today)





