சீனாவில் இருந்து இந்தியா நோக்கி நகரும் ஆப்பிள் நிறுவனம்

அமெரிக்காவில் விற்பனையாகும் அனைத்து ஐஃபோன்களையும் இந்தியாவில் தயாரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போது அமெரிக்காவில் விற்பனையாகும் ஐஃபோன்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டவை.
சீனாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே ஏற்பட்டுள்ள வர்த்தக போர் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி ஐஃபோன்கள் தயாரிக்கும் பணிகளை சீனாவில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டு செல்வதற்கு ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் வருடாந்தம் 60 மில்லியன் ஐஃபோன்கள் இந்தியாவில் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(Visited 28 times, 1 visits today)