ஆப்பிரிக்கா

எகிப்துக்கு சொந்தமான பண்டைய கலைப்பொருட்கள் நெதர்லாந்தில் மீட்பு!

எகிப்து நாட்டில் இருந்து கடத்தப்பட்ட சில பழங்கால தொல்பொருட்கள் நெதர்லாந்தில் மீட்கப்பட்டுள்ளது.

அங்கு இரு பழங்கால பொருட்கள்   கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட பொருட்களில் ஹெலனிஸ்டிக் காலத்தைச் சேர்ந்த மம்மி செய்யப்பட்ட தலை, மற்றும் எகிப்தின் புதிய இராச்சிய சகாப்தத்தில் (கிமு 664-332) ஒரு பீங்கான் ஆகியவை காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹேக்கில் உள்ள தூதரகம் ஒரு அறிக்கையில் மம்மி செய்யப்பட்ட தலை நல்ல நிலையில், இருந்ததாகவும், அதில் முடி மற்றும் எச்சங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டச்சு காவல்துறை மற்றும் கலாச்சார பாரம்பரிய ஆய்வுப் பிரிவினர் சிலைகள் மற்றும் கல்லறையின் பகுதிகளை மீட்டெடுத்தனர், அவை எகிப்தில் இருந்து கடத்தப்பட்டவை என்பதை உறுதி செய்வதாக குறிப்பிட்டுள்ளனர்.

எகிப்திய அதிகாரிகளின் கூற்றுப்படி, சட்டவிரோத அகழ்வாராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று கலைப்பொருட்கள் திருடப்பட்டு கடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. அந்த பொருட்கள் எப்போது தோண்டி எடுக்கப்பட்டு கடத்தப்பட்டன என்பது பற்றிய விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 1 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆப்பிரிக்கா

வடக்கு காங்கோவில் 22 பேரை கடத்திய ஆயுதம் ஏந்திய குழுவினர்!

வடக்கு காங்கோவில் உள்ள கிராமமொன்றில் இருந்து குழந்தைகள் உள்பட 22 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்-யூலே மாகாணத்தில் உள்ள அங்கோ பிரதேசத்தில் உள்ள நகரங்களை வெள்ளை இராணுவ
ஆப்பிரிக்கா

புர்கினோ பசோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

புர்கினோ பசோவின் சில பகுதிகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிஹாதிகளுக்கு எதிராக போராடுவதற்கும், ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும் இந்த ஊரடங்கு