இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் மைதானத்தில் உயிரிழந்துள்ளார்
கிரிக்கெட் போட்டியின் போது இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
35 வயதான இம்ரான் படேல் என்ற தொழில்முறை கிரிக்கெட் வீரர் உயிரிழந்துள்ளார்.
அண்மையில் (27) புனேயில் உள்ள கார்வேர் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது மரணமடைந்த அவர் போட்டியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களம் இறங்கியிருந்தார்.
இடது கை மற்றும் மார்பில் வலி ஏற்பட்டதாக அவர் நடுவர்களிடம் தெரிவித்துள்ளார்.
அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்தில், மைதானத்தை விட்டு வெளியேறும் போது மைதானத்தில் சரிந்து விழுந்தார்.
அதனையடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த திடீர் மரணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அணியின் மற்றொரு வீரர், படேல் நலமுடன் இருப்பதாகவும், அவரது மருத்துவ பதிவுகளில் எந்த ஒரு உடல் நிலை குறித்தும் குறிப்பிடப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.