திருகோணமலையில் கடல்பயணங்களை மீள ஆரம்பிக்க நடவடிக்கை!
திருகோணமலை துறைமுகம் மற்றும் நிலாவெளி புறா தீவை பார்வையிடும் கடல் பயணங்களை மீள ஆரம்பிக்க கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, திருகோணமலை துறைமுகம் மற்றும் நிலாவெளி புறா தீவுக்குச் செல்வதற்கான முன்னோடித் திட்டம் நேற்று (19.08) ஆரம்பமாகியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
திருகோணமலை இயற்கை துறைமுகம் மற்றும் நிலாவெளி புறா தீவின் பவளப்பாறைகளை பார்வையிடுவதற்கு தேவையான கடற்பயண வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இந்த முன்னோடி திட்டமானது பாதுகாப்பான மற்றும் மலிவு விலையில் வழங்கும் எனவும் கடற்படை குறிப்பிட்டுள்ளது.
(Visited 17 times, 1 visits today)





